பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் போர் பதற்றம்
பாகிஸ்தானில் சமீபகாலமாக காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களை குறிவைத்து பயங்கர வாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் தீவரப்படுத்தியுள்ளது. கடந்த 25ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் இந்த வான்வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் எச்சரித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ மையங்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 19 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக ஆப்கன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான்- ஆப்கன் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
Next Story