கொடூரமான ஜெயிலில் இருந்து திறந்து விடப்பட்ட கைதிகள் - அதிர்ச்சி காரணம்.. பதறவைக்கும் காட்சி
சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் போராடி வந்தனர். இந்நிலையில், அதிபர் பஷார் அல் ஆசார் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தலைநகர் டாமாஸ்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனிடையே, அதிபருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு செட்னயா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்கும் பொருட்டு, கிளர்ச்சியாளர்கள், செட்னயா சிறைச்சாலையை திறந்துவிட்டனர். அதில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கைதிகள் வெளியேறினர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டு மாயமான கைதிகளை, உறவினர்கள் தேடி வருகின்றனர். மேலும், அந்த சிறையில் பாதாள அ றைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பொதுமக்கள், சிறையின் தரைகளையும் தோண்டிப் பார்த்து வருகின்றனர்.
Next Story