படைகளை குவித்த இஸ்ரேல்.. கேள்விக்குறியாகும் சிரியாவின் எதிர்காலம்

x

படைகளை குவித்த இஸ்ரேல்.. கேள்விக்குறியாகும் சிரியாவின் எதிர்காலம்

சிரியாவில் அதிபருக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள், ஹோம்ஸ் நகர் நோக்கி படையெடுத்துள்ளனர். ஏற்கனவே அலிப்போ, ஹமா நகர்களை கைப்பற்றியுள்ளனர். இதனை அப்பகுதியில் உள்ள கிளிர்ச்சியாளர்கள் கொண்டாடி வருகின்னர். ஹோம்ஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர்கள் நுழைவதை தடுக்க, அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய வான்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. முக்கியமான பாலத்தில் 8 முறை பிரதான நெடுஞ்சாலையில் உள்ள ராஸ்டன் பாலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சிரியாவின் அண்டை நாடுகளான துருக்கி, சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதாது, உளவுத்துறை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களின் இந்த படையெடுப்பால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்துள்ளதால், சிரியாவின் எதிர்காலம் குறித்து அதிபர் பஷல் அல் ஆசாத் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் தங்களது படைகளை சிரியா எல்லைப் பகுதியில் குவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்