சிரியாவில் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்... - | Syria | Israel | ThanthiTV

x

சிரியாவை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதலை நடத்தி வருகிறது. இருநாடுகள் இடையிலான buffer zone பகுதியிலும் இஸ்ரேலிய படைகள் நுழைந்திருக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே சிரியா மாகாணங்களில் ஞாயிற்று கிழமையில் இருந்து ராணுவ தளவாடங்களை குறிவைத்து 350-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவின் கடற்படை தளத்தையும் இஸ்ரேல் தகர்த்துள்ளது. சிரியாவில் அசாதரணமான சூழல் நிலவும் சூழலில் அங்கிருந்து ரஷ்ய கப்பல் திரும்புவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே ஆசாத் அரசாங்கம் கவிழ்வதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்று ஈரானிய உச்சப்பட்ச தலைவர் காமெனி குற்றம் சாட்டியுள்ளார். அதுபோக பெயரை குறிப்பிடாமல் மற்றொரு அண்டைய நாடும் ஆசாத் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதில் உடந்தையாக இருந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்