கொட்டிய கனமழை.. வெள்ளக் காடாக மாறிய சிட்னி.. | Sydney
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கோடைக்காலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிட்னியில் குறைந்த நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் சிட்னி நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன. தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில் வெள்ள பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Next Story