சூரியனின் மாயாஜாலம்...தேவதூதன் போல் வானில் இருந்து இறங்கிய கதிர்கள்...

x

சீனாவின் வடதுருவம் என்றழைக்கப்படும் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் மோஹே நகரில் உள்ள பெய்ஜி கிராமத்தில் சூரியனால் நிகழ்த்தப்பட்ட ஒரு மாயாஜாலக் காட்சி தான் இது... படிகம் போன்ற பனிப்பொழிவுடன் கூடிய குளிர்ந்த காற்றைக் கிழித்துக் கொண்டு சூரியனின் கதிர்கள் ஒரே நேர்க்கோட்டில் தேவதூதன் போல் பூமியை நோக்கி இறங்கியது கண்கொள்ளாக் காட்சி...இப்பகுதியில் மட்டும் குளிர்காலத்தின் ஒவ்வொரு நாளும் 17 மணி நேரம் வரை இருளாகவே இருக்கும்... இந்த சூழலில் சீன மக்கள் தங்கள் பாரம்பரிய குளிர்கால திருவிழாவையும் கொண்டாடித் தீர்த்தனர்...


Next Story

மேலும் செய்திகள்