பயங்கரமாக மோதிக்கொண்ட இரு தரப்பினர் - இலங்கையில் உச்சகட்ட பதற்றம்
வவுனியாவில் நேற்று இரவு 8 மணியளவில் முன்னாள் மத்திய அமைச்சரும், இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான காதர் மஸ்தானின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது மோட்டர் மோட்டார் சைக்கிளில் வந்த
சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து ரிச்சர்ட் பதியூனும் அவரின் ஆதரவாளர்களும் சென்ற வாகனங்கள் அந்த வழியில் சென்றன. இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் கலவரமாக மாறியது. ரிச்சர்ட் பதியூன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்கள் அங்கிருந்து கிளம்பிச்
சென்றன. போலீசார் நிலைமையை கட்டுப்படுத்திய பின், காதர் மஸ்தானின் பிரச்சார கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த மோதல்களில் காயமடைந்த இருவர் வவுனியா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.