18 ஆண்டுகள் சேவையாற்றிய CT Scanner-க்கு.. மருத்துவமனை ஊழியர்கள் மலர் அஞ்சலி

x

இலங்கையில் 18 வருடங்களாக பயன்பாட்டில் இருந்த சி.டி. ஸ்கேனருக்கு மருத்துவமனை ஊழியர்கள் மலர் அஞ்சலி செலுத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Vovt

கண்டி தேசிய மருத்துவமனையில் 18 வருடங்களாக சி.டி. ஸ்கேனர் பயன்பாட்டில் இருந்து வந்த‌து. தற்போது அந்த இயந்திரத்தை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், சி.டி.ஸ்கேனர் இயந்திரத்திற்கு மலர் வைத்து கவுரவப்படுத்தினர். இதனை, சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். உயிர் இல்லா இயந்திரத்திற்கு, அஞ்சலி செலுத்தும் நிலையிலா சுகாதாரத்துறை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அல்லாடும் நிலையில், இதைப் பார்த்தால் யாருக்குத்தான் எரிச்சல் வராது என்றும், இயந்திரத்திற்கு காட்டும் அக்கறையை மனிதர்கள் மீது காட்டினால் சிறப்பு என்றும் கூறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்