அதிபரான பின் முதல்முறை இந்தியா வந்த அனுரகுமார திஸாநாயக்க | Anura Kumara Dissanayake

x

இலங்கை அதிபர் அனுரகுமார திஸ்நாயக, மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இலங்கை அதிபருடன், அந்நாட்டு அரசு அதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. இலங்கை அதிபராக அனுரகுமார திஸநாயக பதவி ஏற்ற பிறகு, இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை. இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸநாயக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து, இந்தியா - இலங்கை இடையேயான, முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனுரகுமார திஸநாயக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்