ஸ்பெயின் நாட்டு பட்ஜெட் உணவு... ஏழைகளின் ஃபேவரைட் ரெசிபி...
Sunday Lunch க்கு நாம சுடசுட தயார் செய்ய போறது...
ஸ்பெயின் நாட்டவர்களுடைய கிளாசிக் ரெசிபியான"POOR MAN POTATOES".
என்னப்பா ? பெயரே ரொம்ப POOR-அ இருக்கேன்னு ஜகா வாங்கிடாதீங்க... இந்த ரெசிபி ஸ்பெயின்ல உள்ள FIVE STAR HOTEl -ல இருந்து, சின்னசின்ன தட்டுக்கடைங்க வரைக்கும் எல்லா இடத்திலயும் FAST MOVING -ஆ SALE ஆக கூடிய ஃபுட்டாவும் மாறி இருக்கு...
சரி, ஸ்பெயின் மக்களோட நாவில் நடனமாடிக்கூடிய இந்த ஃபேவரைட் ரெசிபிய, நம்ம வீட்டுக்கிட்சன்ல சிம்பிளா எப்படி செய்யலாம்னு பார்த்திரலாம் வாங்க.
முதல்ல, STOVE- மேல கடாய்ய ஏத்தி அடுப்ப பத்த வெச்சிக்கோங்க...
Pan லேசா சூடானதும் அதுல 100ml எண்ணெய்ய ஊத்தணும், உங்ககிட்ட ஆலிவ் ஆயில் இருந்தா அதை யூஸ் பண்றது Better. அது இல்லனாலும் பராவாயில்ல REFINED OIL இல்ல, பாமாயில்ல கூட பட்ஜெட்லயே பண்லாம்.
எண்ணெய் மெதுவா சூடாகிட்டு இருக்கும் போது, பூண்டு பல்ல எடுத்து அதை லேசா இப்படி கீறி வெச்சிக்கோங்க... இப்படி செய்றதால இந்த பூண்டோட ஃபேலவர் ரெசிபில நல்ல இறங்கும்.. அதுக்கப்றம் குடை மிளகாய்ய நீளவாக்குல் நறுக்கி வெச்சிக்கணும். என்கிட்ட கலர் குடை மிளகாய் இருக்குது அது WASTE ஆகிட கூடாதுனு நான் யூஸ் பண்றேன். மற்றப்படி நார்மல் குடை மிளகாய்ல செஞ்சாலும் சேம் டெஸ்ட் தான். So, நீங்க உங்ககிட்ட இருக்குற பெல்பெப்பர்ஸ் போட்டாலே போதும்.
இப்ப, எண்ணெய் சூடானதும், முதல்ல கீறி வெச்சிருந்தோம்ல்லயா அந்த பூண்டையும், நறுக்கின குடை மிளகாயையும் போட்டு மீடியம் ஹிட்ல லேசா வதக்கிவிடுவோம். இந்த கேப்ல நாலு மீடியம் சைஸ் உருளைகிழங்க தோலுரிச்சி எடுத்துக்கோங்க அதை இப்படி சின்ன சின்ன cubes-ஆ கட் பண்ணி ரெடி பண்ணிக்கிளாம்.
இப்ப, அஞ்சு நிமிஷத்துல குடைமிளகாய் நல்ல வதங்கிருச்சி, இதை எண்ணெய்ல இருந்து STRAIN பண்ணி எடுத்துட்டு, அதே எண்ணெய்ல potato போட்டு நல்லா FRY பண்லாம்.
இந்த ஃபிரை ரெடி ஆகிட்டு இருக்குற கேப்ல, ரெசிபியோட SIDISH க்கு தேவையான tomato sauce-ம் fresh தயார் பண்ணிக்களாம்,
இது முழுக்கமுழுக்க ஆப்ஷனல் தான் உங்களுக்கு தக்காளி சாஸ் பிடிக்கும்னா பண்ணுங்க இல்லனா இந்த portion மட்டும் skip பண்ணிக்கோங்க, already வீட்டுல ketchup இருக்குதுனா அதுவும் கூட யூஸ் பண்ணிக்களாம். ஆனாலும், FRESH-அ பண்ற சாஸ் Healthy-ஆனதா இருக்கும்...
SAUSE செய்றதுக்கு மற்றொரு பேன்ல எண்ணெய்ய இப்படி மழைச்சாரல் மாதிரி தெளிச்சுவிடுங்க... நாளஞ்சு பழுத்த தக்காளி எடுத்து அதுல உள்ள ஜூஸ் மட்டும் பிழிஞ்சி எடுத்துக்கோங்க. அதுக்கப்றம் இது மாதிரி பூண்டையும் சின்ன சின்னதா நறுக்கிகளாம், இப்ப எண்ணெய் காய்ஞ்சதும், நறுக்கின பூண்டைப்போட்டு மிதமான ஹிட்ல லேசா வதக்கி விடணும், அது, BROWN COLOR-ஆ மாறிட கூடாது, சரியா, ஒரு நிமிசம் வதக்கினதும், நாம தக்காளி சாஸ்ஸ பேன்ல ஊத்திக்களாம்,
இதுக்கூட நான் சாஸுக்கு தேவையான உப்பையும், கொஞ்சம் மிளகு தூளும் ADD பண்ணிக்கிறேன். இப்ப எல்லாத்தையும் நல்ல மிக்ஸ் பண்ணிவிட்டு மீடியம் ஹிட்லயே கொதிக்கவிடலாம்.
இங்க பாருங்க, பதினைஞ்சி நிமிஷத்துல POTATO எல்லாமே நல்லா GOLDEN BROWN-ஆ மாறிடுச்சி, இது வெந்திருச்சானு நான் ஒரு TOOTHPIC வெச்சி குத்தி பாக்குறேன், நல்ல ஈஸியா உள்ள இறங்குது சோ Potato நல்லா வெந்திருச்சி, இப்ப நாம உருளைகிழங்க எடுத்து STRAINER -ல போட்டுட்டு, ரெசிபியோட FINAL MIXING-க்கு ரெடி பண்லாம்.
எண்ணெய் STRAIN -ஆன பிறகு, CRISPY -யான POTATOS-அ எடுத்து மறுபடியும் DRY-யான PANல போட்டுக்களாம். அதோட மண்ட மேலயே நாம ஏற்கனவே ப்ரை பண்ணி வெச்சிருந்த குடைமிளயாய்யையும், பூண்டையும் அழகா ARRANGE பண்ணுங்க.. அவ்ளோதான் நாம ரெசிபியோட ஃபைனல் STAGE-க்கு வந்தாச்சு, இதுமேல தேவையான அளவு உப்பு, மிளகு தூள் & சேட் மசாலா போட்டு மிக்ஸ் பண்ணிவிடுங்க.
ஆஹா அசத்தலான அறுசுமையும் கூடிய Recipe Almost Ready..
இதை அப்படியே ஒரு தட்டுல எடுத்து, அது மேல நல்ல கொதிச்சு தயாரான தக்காளி சாஸ்ஸயும் படர்ரவிடுங்க,
இதுக்கூடவே குட்டிகுட்டிய நறுக்கின SPRING ONION இல்லனா கொத்தமள்ளி போட்டு GARNISHING பண்ணிட்டா, அவ்வளவு தான்... சூப்பர்ரான "SPANISH POOR MANS POTATO" IS READY...
நீங்களும் இப்படி செஞ்சி பாருங்க, இந்த சன்டேவே மறக்க முடியாத ஸ்பெஷல் ரெசிபி மெமரீஸோட போஸ்ட் போட்டு அசத்துங்க...