துண்டாய் வெடித்த விமானம்.. சிதறிய 120 உடல்கள்.. மரண ஓலம்.. நிற்காமல் உயரும் பலி எண்ணிக்கை

x

175 பயணிகள், 6 ஊழியர்களுடன் பாங்காக்கில் இருந்து பயணித்த ஜேஜு விமானம் தென்கொரியாவின் முவான் நகரில் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறால் தீப்பிடித்து எரிந்தது... விமானமானது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தீப்பிடித்து எரிந்து அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது. இவ்விபத்தில் 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வெடித்துச் சிதறும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மீட்புக்குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 25ம் தேதி அஜர்பைஜனில் ஏற்பட்ட விமான விபத்தில் 38 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்