Ex அதிபரை கைதுசெய்யும் முயற்சி தோல்வி.. கூட்டத்தை பார்த்து திரும்பி சென்ற அதிகாரிகள்
தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யீயோலை கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவசர நிலை பிரகடனபடுத்தியால் யூன் சுக் யீயோலை கைது செய்ய தென்கொரியாவில் உள்ள சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், சியோலில் உள்ள யூன் சுக் இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையில் விசாரணைக் குழு அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், யூன் சுக் யீயோலின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்திற்கு அருகே முகாமிட்டு யீயோலுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பினர். இதனால், அவரை கைது செய்ய முடியாமல் விசாரணை குழு அதிகாரிகள் திரும்பச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Next Story