லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அதிர்ச்சி காட்சி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இரு விமானங்கள் கிட்டத்தட்ட மோதிக்கொள்ளும் நெருக்கத்தில் சென்ற வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Delta ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறக்க மேல் எழும்பிய வேளையில், உள்ளூர் விளையாட்டு வீரர்களை ஏற்றிவந்த தனியார் விமானம் தரையிறங்கியது. அப்போது Delta ஏர்லைன்ஸ் விமானம் கிட்டத்தட்ட தனியார் விமானத்தில் மோதும் அளவிற்கு சென்று உயரே எழுந்தது. அப்போது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் STOP STOP STOPஎன கத்தும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. விபத்தை தவிர்க்க உடனடியாக தனியார் விமானத்தை நிறுத்த கட்டளை பிறபிக்கபட்டுள்ளது. விமான நிலையத்தில் பதிவான காட்சி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
Next Story