வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு செக் வைத்த அரசு..
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்டை, வங்கதேச பாஸ்போர்ட் மற்றும் குடியேற்றத்துறை ரத்து செய்துள்ளது. வங்கதேச ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு கலவரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் ஷேக் ஹசீனாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்ட பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஹசீனா மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள்,ஆலோசகர்கள் ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு,
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது
வாரண்ட்களை பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசினா தற்போது
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story