செல்போன் டார்ச் லைட்டை ஒளிர விட்டு அஞ்சலி செலுத்திய செர்பியா மக்கள் | Serbia
செர்பியா அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பெல்கிரேடில் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் மற்றும் அவரது ஆளும் செர்பிய முற்போக்குக் கட்சிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த மாதம் ரயில் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்து, 15 பேர் பலியான சம்பவத்திற்கு, அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் திரண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு, மவுனமாக நின்று அஞ்சலி செலுத்தினர்.
Next Story