குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல்...வீடியோ வெளியீடு
உக்ரைனின் கிரிவி ரீ நகரில் ரஷ்யா நடத்திய அதிரடி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதுகுறித்த வீடியோ காட்சிகளை உக்ரைன் போலீசார் வெளியிட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலை அடுத்து கரும்புகை வெளியேறிய நிலையில், அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஆங்காங்கே கிடந்த காட்சிகள் மற்றும் குழந்தைகளின் அலறல் சத்தம் பதிவாகியுள்ளது. இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Next Story

