ரஷ்யா சென்ற பிரதமர்.. மோடியை கண்டதும் புன்னகையுடன் கட்டி தழுவி வரவேற்ற புதின்

x

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை, அதிபர் புதின் உற்சாகமாக வரவேற்று கலந்துரையாடினார்.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய - ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் தங்க உள்ள நிலையில், அங்கு ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆடல் பாடலுடன் இந்திய கொடியை கையில் அசைத்தப்படி வரவேற்ற அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்