ரஷ்யாவின் சக்தி வாய்ந்த தலைவரை கொன்ற உக்ரைன்...ஷாக் வீடியோ - புதின் கோபம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியில் உலகம்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களை தாண்டி விடாமல் செல்கிறது. இந்த வேளையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படை ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்து உள்ளார். இகோர் கிரில்லோ கொல்லப்பட்டதற்கு பின்னணியில் உக்ரைன் இருப்பதாக ரஷ்ய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் வைக்கப்பட்டு இருந்தது எனவும் ரேடியோ சிக்னல் வாயிலாக வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.ரஷ்ய அதிகாரி கொல்லப்பட்டதற்கு உக்ரைனும் பொறுப்பு ஏற்றுள்ளது. தங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இகோர் கிரில்லோ பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் தாக்குதலை தொடர்ந்து மூத்த அதிகாரிகள் பாதுகாப்பை ரஷ்யா அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடரும் வேளையில், ரஷ்ய உயர் அதிகாரியை உக்ரைன் கொன்றிருப்பது பதற்றத்தை அதிகரிக்க செய்திருக்கிறது