அவசர நிலை..! ரஷ்யாவில் கரை ஒதுங்கிய சீன கப்பல் - தொடரும் பரபரப்பு

x

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சகெலின் (SAKHALIN ) தீவு அருகே, சீன எண்ணெய் கப்பல் கரை ஒதுங்கியுள்ளதால், அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன் யாங்-2 (An Yang 2) என்ற அந்த கப்பலில், நிலக்கரி, மோட்டார் ஆயில், எரிபொருளுக்கான டீசலுடன் சென்று கொண்டிருந்த‌து. கடும் கடல் சீற்றத்தால், நெவல்ஸ்கி (Nevelsky) பகுதியில் உள்ள ஆழமற்ற இடத்தில் கப்பல் சிக்கியது. கப்பலில் எந்த சேதமும் ஏற்படவில்லை, எண்ணெய் கசியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெவல்ஸ்கி பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மாலுமிகளுடன் உள்ள கப்பலை, கடல் சீற்றம் குறைந்த பிறகே மீட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்