ரஷ்யாவுக்காக களமிறங்கிய வடகொரிய வீரர்கள் சிறைபிடிப்பு... ஜெலன்ஸ்கி அறிவிப்பால் புதிய பரபரப்பு

x

வடகொரிய வீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்குகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில், kursk பகுதியில் வடகொரிய ராணுவ வீரர்கள் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக, அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்காக ராணுவப் படையினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் பத்திரிகையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்க அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்