``அவன் பொருள வச்சே அவன போடுங்கடா’’ - ரஷ்யாவுக்கு ஆப்படித்த இஸ்ரேல்

x

லெபனானில் ஹிஸ்புல்லாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரஷ்ய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் உக்ரைன் இடையேயான இருநாட்டு உறவுகள் குறித்து, இஸ்ரேலின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷரென் ஹஸ்கல் மற்றும் உக்ரைன் தூத‌ர் யெவென் கொர்னிசுக் ஆலோசனை நடத்தினர். அப்போது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுக்கி வைத்திருந்த ரஷ்ய ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்தார். இந்த முடிவுக்கு உக்ரைன் தூத‌ர் யெவென் கொர்னிசுக் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்