புளூ ஆரிஜினில் விண்வெளிக்கு பறந்த பாப் பாடகி கேட்டி பெர்ரி - வெளியான ரம்மிய காட்சி
பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி (Katy Perry ), வெற்றிக்கரமாக விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பினார். 5 பெண்கள் அடங்கிய குழுவுடன் விண்வெளிக்கு சென்ற பாடகி, 'புளூ ஆரிஜின்' (Blue Origin) விண்கலம் மூலம் 105 கிலோ மீட்டர் உயரத்தில், 11 நிமிடம் விண்வெளியில் மிதந்தனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக பெண்கள் குழு மட்டுமே விண்வெளி நோக்கி மேற்கொண்ட பயணம் இதுவாகும். கேட்டி பெர்ரி (Katy Perry )விண்வெளியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Next Story