குவைத்தில் பிரதமர் முன் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம் ...வெளியான முக்கிய தகவல்
குவைத்தில் இந்தியா- குவைத் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக, பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
vovt
இருநாள் அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது,
அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, குவைத் பிரதமரை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், எரிசக்தி பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.