"85 இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு" - பிரதமரிடம் கத்தார் அதிபர் சொன்ன குட் நியூஸ் | PM Modi | Qatar
கத்தார் சிறையில் உள்ள 85 இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
2 நாட்கள் அரசு முறை பயணமாக கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் அகமதி அல்தானி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள கத்தார் அதிபருடன் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகள் தொடர்பாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, கத்தார் சிறையில் சுமார் 600 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் கடந்த 2024-ல் கத்தார் அதிபரால் 85 இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்."85 இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு" - பிரதமரிடம் கத்தார் அதிபர் சொன்ன குட் நியூஸ் | PM Modi | Qatar