18 பேர் துடிதுடிக்க படுகொலை... பாக்,யில் பெரும் பதற்றம்...
மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... கைபர் பக்துன்க்வாவின் குர்ரம் பழங்குடி மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தின் இருபிரிவினர் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ஆயுதமேந்திய கும்பல் அந்த கிராமத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன... பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இரு தினங்களுக்கு முன்னர் இதே ஊரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் வியாழக்கிழமை முதல் வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. சன்னி பிரிவினர் வாழும் பகுதியான பாகன் கிராமத்தில் வசிப்பவர்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி லோயர் குர்ரமில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story