உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை `மன்னிப்பு’
வடகொரிய ஆதரவாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை தடுக்க அவசர ராணுவ நிலைச் சட்டம் கொண்டு வரப்படுவதாக தென்கொரிய அதிபர் அறிவித்தார்... ஆனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பான்மை கிடைக்காததால் அதிபர் யூன் சுக் யோல் ராணுவ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்... அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் வெடித்தன... இந்த சூழலில் தான் யூன் சுக் யோல் மன்னிப்பு கோரியுள்ளார். பொதுமக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்ட அவர், அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். தனது பதவிக்காலம் மற்றும் நாட்டை நிலைப்படுத்துவது தொடர்பான முடிவை தனது கட்சியிடமே விட்டு விடுவதாக தெரிவித்த அவர், மீண்டும் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படாது என உறுதியளித்தார்.