மீண்டும் ஏமாற்றம் - 'நியூ க்ளென்' ராக்கெட்டின் விண்வெளிப் பயணம் ரத்து | New Glenn
விண்வெளி சுற்றுலாவுக்கு பெயர் போன உலக பணக்காரர்கள் ஒருவரான ஜெஃப் பொசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் 'நியூ க்ளென்' ராக்கெட்டின் விண்வெளிப் பயணம் திடீரென ரத்தாகியுள்ளது. இதுவரை தனது நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டின் மூலம் விண்வெளியின் துணை சுற்றுப்பாதை வரை மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று வந்த ப்ளூ ஆரிஜின் நிறுவனம், முதன்முறையாக விண்வெளி சுற்றுப் பாதையை நோக்கி அதன் மிகப்பெரிய ராக்கெட்டான நியூ க்ளெனை அனுப்ப இருந்தது. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ராக்கெட்டின் விண்வெளிப்பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story