"அமெரிக்காவோடு கை கோர்த்து மீண்டும் போர்" - உலகையே பரபரப்பாக்கிய நெதன்யாகுவின் அறிவிப்பு
அமெரிக்காவின் ஆதரவுடன், தேவைப்பட்டால் மீண்டும் போரைத் தொடங்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பிணைக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலுக்குத் திரும்ப அழைத்து வரப்படுவதை உறுதி செய்வேன் என்று தெரிவித்த நெதன்யாகு, போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றிவிட்டதாக குறிப்பிட்டார்... பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 251 பேரில், 94 பேர் இன்னும் காசாவில் உள்ளனர்... இதில் 34 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
