கர்ப்பிணிகளோடு நடுவழியில் சிக்கி தவித்த 400 பேர்.. அதிர்ந்து போன அதிகாரிகள் | Mexico

x

மெக்சிகோவில், நெடுஞ்சாலையோரம் கைவிடப்பட்ட 3 பேருந்துகளில் இருந்த 400 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மெக்சிகோவின் தென்மேற்கில் உள்ள வெராக்ரூஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பேருந்துகள் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, அந்த 3 பேருந்துகளில், மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்லும் 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இருப்பது தெரியவந்தது. இதில் பெரும்பாலானோர் சிறார்கள் மற்றும் கர்ப்பிணிகளாவர். இதில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்கு பின், குடியமர்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்