நெற்றியில் குங்குமம், கழுத்தில் மாலை... மாமல்லபுரத்தில் அமெரிக்கர்கள் நடத்திய யாகம்-வெளியான காரணம்
அமெரிக்க நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர், உலக நன்மை வேண்டி நெற்றியில் குங்குமம், கழுத்தில் மாலை அணிந்து மாமல்லபுரத்தில் சர்வ சாந்தி யாகம் செய்தனர். மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த நிலையில், அங்குள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, தலசயன பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில், உலக நன்மை வேண்டி சர்வ சாந்தி யாகம் நடைபெற்றது. இதில், நெற்றியில், குங்குமம், திருநீறு பூசி கழுத்தில் மாலை அணிந்து அமெரிக்க நாட்டினர் பங்கேற்றனர். பிறகு வைணவ பட்டர்கள் கலசம் வைத்து, அக்னி குண்டத்தில் அவல், பொரி மற்றும் மூலிகைப்பொருள் போட்டு, மந்திரங்கள் ஓதி யாகம் நடைபெற்றது.
Next Story