ஜப்பானில் மோசமான நிலநடுக்கம்... பறந்த சுனாமி எச்சரிக்கை... உயிர் பயத்தில் மக்கள் | Japan

x

ஜப்பானின் தென் மேற்கு பகுதியான கியூஷூவில் ரிட்டர் 6.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு அலைகள் எழும்பக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணி அளவில் சுமார் 39 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிர்ந்துள்ளன. முன்னதாக இதே பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், எவ்வித சேதமும் ஏற்படாததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு அந்த சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்