இதய நரம்பை அறுத்த நெதன்யாகு - முதல்முறை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய இஸ்ரேல்

x

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி போர் மூண்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக, லெபனானில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால், இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனானின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது. இதில், ஹெல்மெட் முதல் அதிநவீன ஆயுதங்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல், ராணுவ செய்தித் தொடர்பாளர் நதவ் ஷோஷானி, பல ஆயுதங்கள் ஈரானிய மற்றும் சிரியா வழியாக வந்தவை என்றும், மற்றவை ரஷ்ய, சீன மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பால் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்