இஸ்ரேலுக்கு எதிரியாகிறதா அமெரிக்கா? - ஒரு கண் வைத்த உலக நாடுகள்

x

இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாத நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கத் திட்டமிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதியில் போரின் போது கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் குறைந்தது 13 ஆயிரம் பயங்கரவாதிகளாவது அடக்கம் என்றும், தெற்குப் பகுதியில் தாக்குதலைத் தொடங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

காசாவில் இதுவரை இஸ்ரேல் படைகளால் 31 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.. கொல்லப்பட்டவர்க்ளில் 72 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது... இந்நிலையில், பைடனின் எச்சரிக்கையையும் மீறி நெதன்யாகு ரஃபா மீது படையெடுப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்... நெதன்யாகுவிற்கும், பைடனுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், நெதன்யாகுவை சந்திக்கவோ... இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றவோ திட்டமிடவில்லை என்று பைடன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்