போர் நிறுத்தம் - காஸாவுக்குள் சீறி பாயும் லாரிகள் - தற்போதைய நிலை என்ன..? | Israel
இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஞாயிறு முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட பின், காசா பகுதிக்குள் நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றன. கடந்த 4நாட்களில் 3 ஆயிரத்து 200க்கும் அதிகமான லாரிகள், நிவாரணப் பொருட்களுடன் காசா பகுதிக்குள் சென்றுள்ளன. நேற்று ஒரே நாளில் 808 லாரிகள் காசாவிற்கு சென்றுள்ளதாக மனிதாபிமான உதவிகளுக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு, லாரிகள் தொடர்ந்து காசாவிற்குள் சென்று வருகின்றன.
Next Story