நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட்..மத்திய அரசு விளக்கம் | Israel | Benjamin Netanyahu
போர் குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நெதன்யாகுவை கைது செய்வோம் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடுகள் கூறிவருகின்றன. இந்த சூழலில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு என்ன? என்று உறுப்பினர்கள் கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை, எனவே அந்நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த ஒரு உத்தரமும் இந்தியாவை கட்டுப்படுத்தாது என தெரிவித்தார்.
Next Story