இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்... யூ டர்ன் அடித்த மாலத்தீவு... நொறுங்கிய சீனாவின் ஸ்கெட்ச்

x

மாலத்தீவு அதிபர் முஹம்மது மொய்சுவும், பிரதமர் மோடியும்

இரு தரப்பு உறவுகள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திப்புக்கு பின்னர் இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையில் ஆன உறவு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, மாலத்தீவின் அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார்.

மாலத்தீவு நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தாலும்,

பேரிடர் காலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக

இருந்தாலும், கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசிகளை

வழங்குவதாக இருந்தாலும்,

ஒரு அண்டை நாடாக இந்தியா தனது கடமைகளை எப்போதும் பூர்த்தி செய்து இருப்பதாக குறிப்பிட்டார்.

மாலத்தீவில் உள்ள அட்டூ பகுதியில் இந்திய நாட்டின் தூதரகம் திறப்பது குறித்தும், பெங்களூருவில் மாலத்தீவு நாட்டின் தூதரகம் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்