பேரிழப்பை சந்தித்த ஹமாஸ்.. மக்களை வெறிகொண்டு தாக்கிய டாங்கிகள் -வெளியான நெஞ்சை உறையவைக்கும் காட்சி

x

காசாவில் தரைவழித் தாக்குதல் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் ஏராளமான ஹமாஸ் குழுவினர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான ஹமாஸ் ராணுவ தளங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... ஒரே நாளில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், ஏவுகணை ஏவுதளங்கள், சுரங்கத்தில் இருந்த ராணுவ தளங்கள் உட்பட சுமார் 300 தளங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... அந்த சமயத்தில் ஹமாஸ் குழுவினரும் சரமாரி தாக்குதல்களை நடத்திய நிலையில், இஸ்ரேலிய வீரர்கள் ஹமாஸ் படையினரைக் கொன்றதாகவும், விமானப்படை வீரர்களும் இத்தாக்குதல்களில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்