கூகுளுக்கு ரஷ்யா அபராதம்.. 2-க்கு பின்னால் 33 பூஜ்யம் சேர்த்தால் வரும் தொகை - தலைசுற்ற வைத்த Fine
கூகுளுக்கு ரஷ்யா அபராதம்.. 2-க்கு பின்னால் 33 பூஜ்யம் சேர்த்தால் வரும் தொகை - தலைசுற்ற வைத்த பைன்
ரஷியாவின் அரசு ஊடகம் ஒன்றை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக கூகுள் நிறுவனம் தனது யூடியூப் தளத்தில் முடக்கியது. இதற்கு எதிராக ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசிலியன் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 20 டெசிலியன் என்பது இந்திய ரூபாய் மதிப்புப்படி 2 க்கு பின்னால் 33 பூஜியம் வரும். இது உலக பொருளாதாரத்தை விட 20 கோடி மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபராத தொகையுடன் 9 மாதங்களுக்குள் சேனலை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அபராத தொகை 2 மடங்காகும் எனவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய நீதிமன்றத்தின் இந்த அபராத தொகை கூகுள் நிறுவனத்தை மட்டுமல்ல கேட்பவர்களையும் தலை சுற்ற வைத்துள்ளது.