போதையில் மிதந்த ஜோடி புறா..! காதலனை 108 முறை சதக் சதக் குத்தி ரத்தம் பார்த்த காதலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது காதலனை 108 முறை கத்தியால் குத்திய பெண் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்... 32 வயதான பிரைன் ஸ்பெஷர், 2018ல் தன் காதலர் சாட் ஓ மலியாவை தொடர்ந்து 108 முறை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்... சாட் ஓ மெலியாவின் குடியிருப்பில் இருவரும் ஒன்றாக கஞ்சா புகைத்துள்ளனர்... ஆனால் அதன் பிறகு பிரைன் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு சுய கட்டுப்பாட்டை இழந்து சாட் ஓ மெலியாவை குத்திக் கொடூர கொலை செய்ததுடன் தன்னையும் பல முறை இடைவிடாமல் கத்தியால் குத்திக் கொண்ட நிலையில், அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்... ப்ரைன் சுய நினைவில் இதை செய்யவில்லை என்பதால் 100 மணி நேர கட்டாய சமூக சேவை செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
Next Story