காசா இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 20 பாலஸ்தீனியர்கள் பலி

x

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காசாவின் கான்யூனிஸ் பகுதியில் அகதிகளாக தங்கியிருந்தவர்களின் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி தீப்பிடித்து பயங்கமாக எரிந்தது. இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் அப்பகுதி அழுகை ஒலமாக காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்