16,000 பச்சைக் குழந்தைகள்... 11,000 பெண்கள் படுகொலை... புதைக்கவே இடமில்லை... உலகை உலுக்கும் பயங்கரம்

x

காசாவில் தந்தை தன் இரட்டைக் குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் வாங்கச் சென்றிருந்த சமயத்தில்...அவரது குழந்தைகள் இஸ்ரேல் குண்டுகளுக்கு இரையான சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது... என்னதான் நடக்கிறது காசாவில்?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

திறந்தவெளி திசையான காசாவில்...திரும்பும் திசையெல்லாம் சவக்குழிகள்...

புதைப்பதற்கிடமில்லை என கதறுகின்றனர் பாலஸ்தீனியர்கள்...புதைக்க சிரமம் ஏன்? என சாம்பலாக்கி விடுகின்றன இஸ்ரேல் குண்டுகள்...

இதோ...வெறும் பிறப்பு சான்றிதழ்களை மட்டும் வைத்துக் கொண்டு பிறந்து 4 தினங்களேயான பிஞ்சுக் குழந்தைகளைத் தொலைத்து விட்டு நிற்கிறாரே இவர் தான் Al Qumsan...

இஸ்ரேல் படைகள் விரட்டியடிக்க...காசா நகரில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி...Deir Al Balahவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்தனர் Al Qumsan குடும்பத்தினர்...

அழகான ஆண் குழந்தை...தேவதை போன்ற பெண் குழந்தை...பிரசவித்த வலியில் இருந்து இன்னும் விடுபடாத மனைவி...கூடவே மாமியார்...எல்லோரும் வீட்டில் இருக்க...தன் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பதிய சென்றுள்ளார் Al Qumsan...

அப்போதுதான் அந்த கோர சம்பவம் அரங்கேறியது...

இஸ்ரேலின் ராக்கெட்டுகள் வீட்டைத் தாக்க...ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டனர் Al Qumsan குடும்பத்தினர்...

தன் செல்ல பிள்ளைகளுக்காக பிறப்பு சான்றிதழை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய Al Qumsan...வீடே தரைமட்டமாகிக் கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தார்...

2 பிறப்பு சான்றிதழ்களும்...Al Qumsanமும் மட்டும் தான் அவரது குடும்பத்தில் மிச்சம்...

இது ஒரு கதை...இன்னும் சொல்லப்படாத கண்ணீர்க்கதைகள் ஆயிரமாயிரம்...

அக்டோபர் 7ல் போர் துவங்கியது முதல் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 40,000ஐக் கடந்து சென்று கொண்டிருக்கிறது...

பிழைத்த பலருக்கு ஒன்று பெற்றோர் இருக்க மாட்டார்கள்...இல்லையென்றால் உறவினர்கள் இருக்க மாட்டார்கள்...

குண்டு சத்தத்துக்கு மத்தியில் அவர்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர் பூமிக்கடியில்...

இறந்தவர்களில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பச்சைக் குழந்தைகள்...11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெண்கள்...கேட்கும்போதே மரண வலியைத் தருகிறது இந்த செய்தி...

மயானம் போல் காட்சியளிக்கிறது ஒட்டுமொத்த காசாவும்...

காசா முழுக்க மரண ஓலங்களும்...ஒப்பாரிகளும் ஆக்கிரமித்திருக்க...இன்னும் எத்தனை காலம் மவுனித்திருக்கும் இந்த உலகம்?...

ஒட்டுமொத்த பிரதேசமும் சுடுகாடு ஆவதற்குள் காப்பாற்றப்படுமா காசா?...பொறுத்திருந்து பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்