சர்வதேச சமையல் - Garlic Mushroom Chicken

x

நான் வெஜ் பிரியர்கள் சிக்கன் சாப்டுவாங்க... வெஜ் பிரியர் மஸ்ரூம் சாப்டுவாங்க... ஆனா இந்த ரெண்டத்தையும் கலந்து கட்டி மணக்க மணக்க ரெடியாகுற பிரான்ஸ் நாட்டு ரெசிபி தான்... Garlic Mushroom Chicken...

நம்ம வீட்ல சண்டே வந்தா கோழி அடிச்சு குழம்பு வைக்குற மாதிரி... பிரான்ஸ் காரங்க சண்டே அன்னைக்கு பெரும்பாலும் சமைக்குறது இந்த ஐட்டத்த தான்...

அதுனால இன்னைக்கு நாம இதை சமைச்சு சாப்ட்டு ஒரு புடி புடிப்போம்...

Garlic Mushroom Chicken சமைக்க தேவையான பொருட்கள்... சிக்கன், மஸ்ரூம், வெங்காயம், பூண்டு, சிக்கன் ஸ்டாக், fresh cream, ஆலிவ் ஆயில், பட்டர், dried oregano, கொத்த மல்லி, ச்சீஸ், உப்பு, மிளகு தூள் அம்புட்டு தான் இனி சமையலை ஸ்டார்ட் பண்ணிடலாம்....

சமையலின் முதல் கட்டமா... ஒரு 300 கிராம் சதை நிறைஞ்ச சிக்கனை நாளு துண்டா வகுந்து... அது மேல அரை ஸ்பூன் மிளகு தூளையும்... உப்பையும் தூவி விட்டுக்கோங்க...

நெக்ஸ்ட்டு 200 கிராம் மஸ்ரூம்ம எடுத்து slice... slice -அ நறுக்கிக்கனும்... அது கூடவே ஒரு வெங்காயத்தையும்... 6 பூண்டு... கொஞ்சோண்டு கொத்த மல்லி இந்த மூனுத்தையும் எடுத்து பொடி பொடியா நறுக்கிக்கோங்க...

அடுத்து சூடேறிய கடாய் பாத்திரத்துல ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஊத்தி அதுல ஒரு முழு சைஸ் பூண்ட போட்டு விடுங்க... அப்போ தான் ஆயில் வாசனை வராம இருக்கும்...

ஆயில் நல்லா கொதிக்க ஆரம்பிச்சதும் நறுக்கி வச்ச சிக்கனை கடாய்ல போட்டு... பொன்நிறத்துக்கு பொறிச்சு தனியா எடுத்து வச்சுடுங்க...

சிக்கனை பொறிச்ச மாதிரியே... மஸ்ரூமையும் பொன்நிறத்துல பொறிச்சு... ஒரு ஸ்பூன் பட்டர்... நறுக்கி வச்ச பூண்டு வெங்காயம் ரெண்டையும் போட்டு நல்லா வதக்கி விடுங்க...

நெக்ஸ்ட்டு அரை கப் சிக்கன் ஸ்டாக்க ஊத்தி... ஒரு ஸ்பூன் oregano, நறுக்கி வச்ச கொத்தமல்லி ரெண்டையும் தூவி விட்டு... நல்லா வதக்கி 10 நிமிசம் சிம்ல கொதிக்க விட்டுக்கோங்க...

10 நிமிஷம் ஆனதும் அரை கப் பிரஷ் க்ரீம போட்டு அது மேல கால் கப் ச்சீஸ்ஸ துருவி விட்டு மொத்தத்தையும் மிக்ஸ் பண்ணிக்கோங்க...

பைனல்லா வருத்து வச்ச சிக்கன் துண்டையும்... உள்ள போட்டு ஒரு பொரட்டு பொரட்டி எடுத்தா... டேஸ்டியான Garlic Mushroom Chicken ரெடி...

அப்புறம் என்னாங்க... இந்த சன்டேவ Garlic Mushroom Chicken- ஒட செலப்ரேட் பண்ணுவோம்...


Next Story

மேலும் செய்திகள்