கரை ஒதுங்கிய அரிய வகை துடுப்பு மீன் - கெட்ட சகுனமா?
ஆழ்கடலில் மட்டுமே இருக்கும் அரிய வகை துடுப்பு மீன், மெக்சிகோவில் கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பஜா கலிபோர்னியா சுர் (Baja California Sur) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில், இந்த துடுப்பு மீன் தென்பட்டுள்ளது. இதனை மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர். ஆழ்கடலில் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட இந்த மீன், கடற்கரைக்கு வந்தால் ஆபத்து வரும் என கருதப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானிலும், 2024ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் இதே போன்று துடுப்பு மீன் கரை ஒதுக்கியதும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுபோன்று, இப்போது மெக்சிகோவிலும் ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story