3000 பேர் Layoff - ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய பிரபல நிறுவனம்

x

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம், 3000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது, ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையை, பிப்ரவரி 11ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணை தலைமை அதிகாரி ஜெனல் கேல் வெளியிட்டுள்ளார். அதில், குறைந்த செயல் திறன் கொண்ட, 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக வெளியாகி உள்ள இந்த அறிவிப்பால், சுமார் 3,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்க உள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்