வெடித்து சிதறியதால் அதிர்ச்சி - பரபரப்பில் அமெரிக்கா
எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் (starship) சூப்பர் ஹெவி (Super Heavy) ராக்கெட்டின் 8வது சோதனை முயற்சி அமெரிக்காவின் டெக்சாஸில் (texas) உள்ள ஏவுதளத்தில் மேற்கொள்ளப்பட்டது. தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சில நிமிடங்களிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியதாக தெரிகிறது. சூப்பர் ஹெவி பூஸ்டர் பகுதியை (super heavy booster) ஏவுதள கோபுரத்தில் இருந்த ராட்சத உலோக கரங்கள் தாங்கிப்பிடித்தன.
இதனிடையே, வெடித்துச் சிதறிய ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் அதிக வெளிச்சத்துடன் தெற்கு ப்ளோரிடா (florida) மற்றும் பஹாமாஸ் (bahamas) வான்பகுதியில் தென்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story