கோடிகளை அள்ளித்தரும் விபரீத வியாபாரம்.. `1கிராம் - 1 லட்சம்'... உங்கள் இடத்தில் விண்கல் கிடைத்தால்?

x

நாள்தோறும் சுமார் 48 டன் விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கிச் செல்வதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

அவற்றுள் கடலில் விழும் விண்கற்கள் ஒருபோதும் மீட்கப்படுவதில்லை. ஆனால் பூமியின் நிலப்பகுதியில் விழும் விண்கற்கள் யாருக்கு சொந்தம் என்பதில் புதிய போட்டியே தொடங்கிவிட்டது.

உலகளவில், விண்கல் வேட்டை சமீபகாலமாக மிகவும் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. விண்கற்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

பூமிக்கு வெளியே இருந்து வருவதால் விண்கற்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பதுடன் அதுபற்றிய சுவாரஸ்யமும் அதற்கென தனி சந்தையை உருவாக்கிவிட்டது.

கடந்த ஆண்டு நியூசிலாந்து 810 கிராம் எடையுள்ள ஆப்பிள் அளவிலான விண்கல்லை முறைப்படி பதிவு செய்தது. இது

Tekapo-டெகபோவுக்கு அருகிலிருக்கும் மத்திய தெற்கு தீவில் உள்ள பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் விழுந்தது.

இதேபோல், 2004 ஜூன் 12, -இல் ஆக்லாந்தில் வீட்டின் கூரை வழியாக 1.3 கிலோ எடையுள்ள விண்கல் விழுந்தது

சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகெங்கிலும் இருந்து பலர் அதை வாங்க முன்வந்தனர்.

ஆனாலும், அந்த வீட்டில் வசித்த வயது முதிர்ந்த தம்பதியினர், ஆக்லாந்து போர் நினைவு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் காட்சிக்காக அதனை ஒப்படைத்தனர்.

விண்கற்கள் சேகரிக்க பலரும் ஆர்வம் காட்டுவதால் சர்வதேச அளவில் இதன் வணிகம் பல மடங்கு வளர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் த.வி. வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.


Next Story

மேலும் செய்திகள்