மஸ்க் வீட்டில் அடுத்தடுத்து கேட்கும் ’குவா.. குவா..’ சத்தம் ’’இது 14வது குழந்தையாம்’’
உலகப் பணக்காரர்கள்ல ஒருவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்போட ரொம்ப நெருங்கிய ஆலோசகருமான எலான் மஸ்க்குக்கு 14வது குழந்தை பிறந்துருக்கு... ஆணா? பொண்ணான்னு தான கேக்குறீங்க... மஸ்க்கோட நியூராலிங்க் நிறுவனத்துல ஒரு நிர்வாகியா இருக்க Shivon Zilis மூலமா மறுபடியும் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருக்காரு நம்ம மஸ்க்... Shivon Zilis ஓட ஏற்கனவே அவருக்கு 3 குழந்தைங்க இருக்கு... சமீபத்துல தான் ஆஷ்லே செயின்ட் க்ளேர் தனக்கும் மஸ்க்குக்கும் குழந்தை பிறந்துருக்குறதா அறிவிச்சது பரபரப்ப ஏற்படுத்துச்சு... அது நடந்து இரண்டே வாரத்துல மஸ்க்கோட 14வது குழந்தை பற்றிய அறிவிப்பு வந்துருக்கு... Seldon Lycurgus-னு அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டிருக்காங்க...இதபத்தி நம்ம Shivon Zilis போட்ட போஸ்ட்டுக்கு மஸ்க் ஹார்ட்டின் விட்ருக்காரு...
Next Story