கனடாவைக் கைப்பற்றும் அமெரிக்கா.. கொளுத்தி போட்ட எலான் மஸ்க்.. ஆடி போய் நிற்கும் மேற்குலக நாடுகள்

x

இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரும் அவருடைய நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க் கூறிவரும் கருத்துக்கள் மேற்குலக நாடுகளையே ஆட்டம் காண வைத்து வருகின்றன. நேட்டோ படைகளின் உறுப்பு நாடுகளான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது என டிரம்ப் பேசியது சர்ச்சையான நிலையில், அதிபர் தேர்தலில் எலான் மஸ்கின் தலையீடு ஜெர்மன் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை பிரான்சில் கூட ஏற்படலாம் என உலக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஷ்ய அதிபர் புதின் உடனான டிரம்பின் நட்பும், இதுவரை தைவான் மீதான சீனாவின் அத்துமீறல் குறித்து அவர் மௌனம் காப்பதும் உலக அரசியலில் தற்போது பெரும் விவாதமாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்