ட்ரம்பை சுற்றிசுற்றி வரும் மரணம்..! குறி வைத்த AK47 - சிதறாமல் தப்பிய தலை - Ryan Wesley சீன ஏஜெண்டா?

x

ட்ரம்ப் மீது 2வது முறையாக படுகொலை முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள Ryan Wesley குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன...

நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல்...அதற்குள் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது 2வது முறையாக படுகொலை முயற்சியா? என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் அமெரிக்கர்கள்...

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் Palm Beach Countyயில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படவிருந்ததை தடுத்துள்ளனர் அமெரிக்க சிறப்பு பாதுகாப்புப் படையினர்...

காரில் தப்பிச் சென்ற Ryan Wesley அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை கொல்லும் அளவு துணிந்த இந்த Ryan Wesley யார்?...

Ryan Wesley வடகரோலினாவில் ஒருகாலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்தவராம்...

இவருக்கு ராணுவ பின்னணி இல்லை என்ற போதிலும்...2022ல் ரஷ்யா-உக்ரைன் போரில் சண்டையிட சமூக வலைதளத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்...

"உக்ரைனில் சண்டையிட்டு சாகத் தயார்" என பரபரப்பு பதிவிட்டுள்ளார் ஒருமுறை...

ஆப்கன் வீரர்கள் போருக்குத் தேவை என்றெல்லாம் தெரிவித்துள்ளார்...

பொதுமக்கள் இந்தப் போரை மாற்றி எதிர்காலப் போர்களைத் தடுக்க வேண்டும் என்று அழைப்பெல்லாம் விடுத்துள்ளார்...

மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் தினமும் பங்காற்ற வேண்டும் என்றும்...

நாம் ஒவ்வொருவரும் சீனர்களுக்கு உதவ வேண்டும் எனவும் வாட்ஸ் அப் பயோவில் வைத்துள்ளார்...

Ryan Wesley கைதாவது இது ஒன்றும் முதல்முறையல்ல...

கடந்த 2002ம் ஆண்டு...வடகரோலினாவில் உள்ள Greensboro நகரில் உள்ள கட்டடத்திற்குள் பயங்கர ஆயுதத்துடன் நுழைந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்...

குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்ற போதிலும்..அவர் எப்படி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்