ஒற்றை காலில் நின்று போராடி டைவர்ஸ் வாங்கிய பிரபல ஜோடி

x

ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். 3 குழந்தைகளை பெற்றெடுத்த அவர்கள், மேலும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர். 6 குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்புகள், சொத்துக்களை பங்கிடுவது தொடர்பான பேச்சு வார்த்தையால் கடந்த 8 ஆண்டுகளாக விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் தம்பதி தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக, ஏஞ்சலினா ஜோலியின் வழக்கறிஞர் ஜேம்ஸ் சைமன், பத்திரிகையின் வாயிலாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்